Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக சமந்தா வாங்கிய சம்பளம்..‌. எவ்வளவு தெரியுமா?… வெளியான ஆச்சர்ய தகவல்…!!!

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக நடிகை சமந்தா 3 கோடி முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடருக்காக நடிகை சமந்தா 3 கோடி முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The Family Man 2: Samantha Akkineni jumps off a building, does her own  stunts in BTS video | Entertainment News,The Indian Express

திரைப்படங்களில் நடிக்க ரூ.1.5 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் சமந்தா வெப் தொடருக்காக அதைவிட அதிக சம்பளம் வாங்கியுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வெப் தொடரின் இரண்டு சீசன்களிலும் நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடிகை பிரியாமணிக்கு ரூ.80 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |