ஆடை பட தயாரிப்பாளரின் புதிய படத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக நடித்து பிரபலமடைந்தவர் காளி வெங்கட் . கடந்த வருடம் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் காளி வெங்கட்டின் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில் ஆடை பட தயாரிப்பாளர் விஜி சுப்பிரமணியம் தயாரிக்கும் புதிய படத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் பிரம்மா இயக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்விகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.