தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த இறுதி நாள் மே 10ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மே மாதம் 24ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மே மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.
மேலும் ஊழியர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மின் அளவீடு செய்யாமல் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் கணக்கீடு அளவை தெரிவிக்கலாம் எனவும் மின் மையம் தெரிவித்திருந்தது. இதன்படி தற்போது மே 10-ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி கால அவகாசம் உள்ளவர்கள், ஜூன் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.