Categories
தேசிய செய்திகள்

நாட்டின் முதல் பெண் டிஜிபி மரணம்… அதிகாரிகள் இரங்கல்..!!

நாட்டின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்.

1973ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற காஞ்சன் சௌத்ரி 1974 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பிஜேபி ஆக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் டிஜிபி அதிகாரி என்ற சாதனையை படைத்தார். தனது பதவியிலிருந்து 2007ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹரியானா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Image result for டிஜிபி காஞ்சன் சௌத்ரி

அதன்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காஞ்சன் சௌத்ரி நேற்று காலமானார். அவரை நினைவுகூர்ந்து உத்தரகாண்ட் காவல்துறை அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தையடுத்து காவல் துறையில் அவரது தனித்துவமான பங்களிப்பை சக அதிகாரிகளிடையே எடுத்துரைத்துள்ளனர்.

Categories

Tech |