தேனி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மணியாரம்பட்டியில் விஜயகுமார்(23) என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவியை டி.சுப்புலாபுரம் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக தேனி குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் இடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் உடனடியாக இளைஞர் மீது ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.