நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொடூரமாய் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. முன்கள பணியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கவனித்துக் கொள்ள மத்திய அரசு ஊழியர்கள் 15 நாட்கள் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அல்லது குடும்பத்தினர் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களை கவனித்துக் கொள்ள மத்திய அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது.