ஆடை பட தயாரிப்பாளருடன் பிரபல நடிகர் காளி வெங்கட் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் காளி வெங்கட். இவர் தற்போது ஆடை பட தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியம் தயாரிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இத்திரைப்படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரும் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னருமான ரித்விகாவும் நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. பிரம்மா இயக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டில் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.