கேரளா வயநாட்டில் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.இதனால் 150 பேர் வரை உயிரிழந்தனர். கடுமையாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவை சரி செய்து தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கன மழை பெய்த தொடக்கத்திலேயே ராகுல் காந்தி கடந்த 11 – 14 ஆகிய தேதிகளில் வயநாடு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக இன்று 3 நாட்களை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். அதில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பல்வேறு பகுதி பாதிப்புகளை பார்வையிடுகின்றார். முதல் நாளான இன்று ராகுல் காந்தி வயநாட்டில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் இருக்கும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.