Categories
மாநில செய்திகள்

ஜூன் 14-க்குள் தேர்வு கட்டணம் செலுத்த உத்தரவு….. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வு இம்மாத இறுதியில் ஆன்லைனில் நடைபெற உள்ளதால், பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் ஒரு பாடத்திற்கு 750 ரூபாயை ஜூன் 14 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |