நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் சில மாநிலங்களில் அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 20ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். புதிய வழிகாட்டுதலின்படி காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை கடைகள் இயங்கும் என்றும்,அரசு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும் எனவும் இந்த நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.