நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் இயக்கப்பட்டு வந்தாலும் மக்கள் கொரோனா அச்சத்தால் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு செல்லும் பயணிகள் விமான சேவை ஜூலை 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் ஏர் இந்தியா விமானத்தில் முன்பதிவு செய்தவர்கள் தங்களது பயண தேதியை மாற்றி மறுபடியும் வேறு தேதியில் பதிவு செய்ய கோரியுள்ளது.