குடும்பத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரபல இயக்குனர் தவறான தகவல்களை புறந்தள்ளுவோம் என்று கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. ஆகையால் அனைவரும் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் அறிவுறுத்தலின் பேரில் தானும் தன் குடும்பமும் ஊசியை செலுத்தி கொண்டதாகவும், தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் வளமான ஆரோக்கியமான நோய் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.