நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. நோய்த்தொற்றால் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் IPL 2021 கிரிக்கெட் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பரில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட IPL 2021 கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.