‘ஏ கோலி சோடாவே’ எனும் பாடலை நினைவு கூர்ந்துள்ள தனுஷின் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் கூடிய விரைவில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் கோலிசோடா ஒன்றை பார்த்தபடி எடுத்துள்ள புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் அதனுடன் இதனை பார்க்கும் போது ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ஏ கோலி சோடாவே’ பாடல் வரிகள் தான் தற்போது ஞாபகத்திற்கு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனுஷின் இந்த அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/CP3xBK6hMgF/