சமையலில் அன்றாடம் தேவையான ஒரு பொருளாக சமையல் எண்ணெய் இருக்கிறது. இதில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்கள் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அதிகளவிலான எண்ணெய்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அந்தவகையில் இந்தியாவுக்கான தேவையில் சுமார் 80 சதவீதம் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 70 முதல் 100 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்துள்ளதாக சமையல் எண்ணை மொத்த விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.