பிரபல நடிகை டாப்ஸி தனது திருமணம் குறித்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இதைத்தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் என்பவரை காதலிப்பதாகவும் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் நடிகை டாப்ஸி தனது காதலருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டாப்ஸி கூறியதாவது, “சினிமா துறையில் இருப்பவரை காதலிக்க விருப்பமில்லை. எனது சொந்த வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் தனித்தனியாக இருக்க விரும்புகிறேன்.
எனது காதலர் மத்தியாஸ் எனக்கு நெருக்கமாக இருக்கிறார்.ஆகையால் அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை நான் இணையத்தில் பதிவு செய்து வருகிறேன். ஆனால் தற்போது திருமணம் குறித்த எந்த சிந்தனையும் இல்லை. தற்போது ஆண்டிற்கு தற்போது 5 அல்லது 6 படங்களில் நடித்து வருகிறேன். இந்த எண்ணிக்கை 2 அல்லது 3ஆக குறையும் போது திருமணத்திற்கு தயாராவேன் என்று கூறியுள்ளார்.