நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியம் வழங்கும் திட்டம் வழங்கிவருகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் PMAY Urban மற்றும் PMAY Gramin என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, அரசு தரப்பிலிருந்து, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கீழ் (நகர்ப்புறம்) மேலும் 3.61 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கான 708 திட்ட முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜூன் 8ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தத் திட்டத்தின் கீழ் இயங்கும் மத்திய ஒப்புதல் அளித்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் (சிஎஸ்எம்சி) 54ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.