Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நள்ளிரவில் வந்த சத்தம்…. படுகாயமடைந்த விவசாயி…. விரட்டி அடித்த வனத்துறையினர்….!!

வேலூரில் ஒற்றை யானை விரட்டி படுகாயம் அடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் தனது சொந்தமான மாந்தோப்பில் காவலுக்கு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் அவ்வழியாக வந்த ஒற்றை யானையின் பிளிறல் சத்தத்தை கேட்டு ரமேஷ் அங்கு இருந்து தப்பிக்க முயன்றதால் யானை விரட்டியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து ரமேஷின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து பார்த்த போது யானை அந்த பகுதியில் இருந்து தப்பி விட்டது. அதன் பின் படுகாயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் மேல் சிகிச்சைக்காக ரமேஷ் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அந்த ஒற்றை யானை மீண்டும் அதிகாலை கொத்தூர் கிராமம் அருகில் வந்ததால் கிராம மக்களின் உதவியுடன் வனத்துறையினர் பட்டாசு வெடித்து அதை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்துள்ளனர்.

Categories

Tech |