ரெனால்ட் நிறுவனம் தனது புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது .
இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரானது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த , புதிய க்விட் கார் பி.எஸ்.4 ரக என்ஜின்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் க்விட் கே.இசட்.இ. எலெக்ட்ரிக் காரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக , இந்த புதிய க்விட் காரில் விட் கே.இசட்.இ. போன்ற ஹெட்லேம்ப் செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . இதனுடன் , எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் கிரில் அருகில் பொருத்தப்படலாம் என்றும், ஹெட்லேம்ப் பம்ப்பரின் கீழ் இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது . இதன் டெயில் லேம்ப்களிலும் எல்.இ.டி.க்கள் வழங்கப்பட்டு, முன்புறம் மற்றும் பின்பக்கங்களில் புதிய வடிவமைப்பு கொண்ட பம்ப்பரும் கொடுக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக , புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 800சிசி என்ஜின் வழங்கபட்டுள்ளது . இந்த என்ஜின் 54 ஹெச்.பி. பவர், 72 என்.எம். டார்க் செயல்திறனையும் , 1.0 லிட்டர் என்ஜின் 65 ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறனையும் வழங்குகிறது. இந்த , ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பி.எஸ்.4 ரக என்ஜினும் அதன்பின் பி.எஸ்.6 என்ஜினும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . குறிப்பாக , புதிய க்விட் மாடலில் பாதுகாப்பிற்கு டூயல் ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது .
இது அக்டோபர் 2019 முதல் அமலாக இருக்கும் கிராஷ் டெஸ்ட் விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது . தற்போது விற்பனையாகும் க்விட் மாடல் காரில் ஒற்றை ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது . மேலும் , இந்த கார் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கும் ஹேட்ச்பேக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .