Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த நேரத்தில் மொத்த வியாபாரம்…. கோரிக்கை வைத்த வியாபாரிகள்…. கலெக்டரின் அனுமதி….!!

மீன் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் செய்வதற்கு கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 7-ஆம் தேதியில் இருந்து மீன் மார்க்கெட் செயல்பட்டு அதிகாலை 6 மணிக்கு மேல் மொத்த வியாபாரம் செய்ய மட்டும் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால்  வாடிக்கையாளர்கள் நேரில் சென்று மீன் வாங்க முடியாதனால் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கு மீன்கள் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 6 மணி ஆகுவதற்குள் மீன் மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்திற்கு அனுமதி கொடுத்தால் தான் இந்த மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மீனை எளிதாக வழங்கி  மீன்கள் கெட்டுப்போகாமல் விரைவில் கொடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால்  காவல்துறையினர் வியாபாரிகள் பகலில் மட்டும் மொத்த வியாபாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து இந்த மார்க்கெட்டின் சங்க தலைவர் எம். சி. காலித் மற்றும் வியாபாரிகள் கலெக்டர் சண்முகம் சுந்தரத்திடம் இரவில் மொத்த வியாபாரம் செய்வதற்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மீன் மார்க்கெட் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரம் செய்ய கலெக்டர் சண்முகசுந்தரம் அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி வியாபாரிகள் நள்ளிரவு 12 மணிக்கு மீன் மார்க்கெட்டில் கடைகள் திறக்கப்பட்டு அதிகாலை 6 ஆறு மணிக்குள் அனைத்து கடைகளையும் அடைத்துள்ளனர். இதேபோன்று மீன் மார்க்கெட் அருகில் உள்ள லாரி ஷெட்டில் சில்லரை விற்பனை மீன் இறைச்சி கடைகள் செயல்பட்டு பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் மீன்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

Categories

Tech |