கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் போது பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என்று பாஜக எம்.எல்.ஏ. திலிப் குமார் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின்பால் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது , கடவுள் கிருஷ்ணர் ஆடிக்கொண்டு இருக்கும் போது புல்லாங்குழல் ஊதுவார். அப்போது அவர் ஊதியதை கேட்டால் பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என்றும் , இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.இவரின் இந்த கருத்து அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பாஜகவினர் இது போன்று பேசி வருவது சர்சையையும் , விமர்சனத்தையும் எழுப்பி உள்ளது. திரிபுரா பாஜக முதல்வர் குளத்தில் வாத்தை வளர்த்தால் அதிகமான ஆக்சிசன் கிடைக்கும் என்றார்.தற்போது கூட பாஜகவின் தலைவர்கள் மரணத்திற்கு எதிர்க்கட்சியினர் தீய சக்தியை ஏவி விட்டதுதான் காரணம் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.