தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா தடுப்பு ஊசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி கை இருப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் கையிருப்பில் இருப்பது 1,060 தடுப்பூசிகள் மட்டுமே. இன்னும் ஓரிரு நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாடு முழுமையாக நீங்கும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.