Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்து…. உயிர் தப்பிய டிரைவர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

தின்னர் பேரல்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை பாரிமுனை லிங்கரெட்டி தெருவில் துறை என்பவர் வசித்து வருகின்றார். இவரின் மகன் செந்தில்குமார் சொந்தமாக கன்டெய்னர் லாரி வைத்துள்ளார். அந்த லாரியை பள்ளிகொண்டான் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சத்யராஜ் என்பவர் ஓட்டி வருகின்றார். இந்நிலையில் சத்யராஜ் பெங்களூரில் இருந்து 140 லிட்டர் கொள்ளளவு கொண்ட  7 டன் எடையிலான தின்னர் பேரல்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மதியம் 1 மணி அளவில் கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை அருகில் லாரி வந்து கொண்டிருக்கும்போது மற்றொரு லாரியை முந்தி செல்ல சத்யராஜ் முயற்சி செய்ததால் நிலைதடுமாறி லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது.

இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த சத்யராஜ் காயத்துடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து லாரியில் ஏற்றி வரப்பட்ட 7 டன் தின்னர் பேரலை மற்றொரு கன்டெய்னர் லாரிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல்றந்த தீயணைப்பு துறையினர் உதவி மாவட்ட அலுவலர் எஸ். பழனி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளத்தில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி மீது மூன்று மணி நேரம் தண்ணீரை அடித்து குளிரூட்ட செய்துள்ளனர். அதன்பின்னர் கன்டெய்னர் லாரியில் இருந்த 7 டன் தின்னர் பேரல்களை கிரேன் மூலமாக மற்றொரு கண்டெய்னர் லாரி ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Categories

Tech |