Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தேவையானது கரெக்டா கிடைக்குதா…? அதிகாரியின் திடீர் ஆய்வு… தீவிர கட்டுப்பாடு நடவடிக்கை…!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் பகுதிகளில் அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் தேர்வுநிலை பேரூராட்சியின் உதவி இயக்குனர் வெங்கடேசன் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது அவர் அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் சங்கராபுரம் பகுதியில் நோய் தொற்று காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன்பின் வெளிநபர்கள் உள்ளே செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |