விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆண்டான் கோவில் கோபுரத்தில் உள்ள பழைய விளக்குகளை அகற்றி புதிய மின்விளக்குகளை பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோவில் உள்ளது. கோவிலின் கோபுரம் 11 அடி உயரத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த 11 அடுக்குகளிலும் அமைக்கப்பட்ட மின்விளக்குகள் இரவு நேரங்களில் பிரகாசமாக ஒளிருவதை பார்ப்பதற்கே மிகவும் அழகான தோற்றத்தை கொடுக்கும்.
இதனையடுத்து சில மாதங்களாக மின் விளக்குகள் சரியாக எரியாமல் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவில் கோபுரத்தில் பழுதான மின் விளக்குகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பழைய விளக்குகளை அகற்றி புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கோவில் கோபுரம் மிகவும் பிரகாசமாக உள்ளது.