கிணற்றில் தவறி விழுந்த மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிதம்பரப்பேரி கிராமத்தில் தனி ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அப்போது இதனை பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தொலைபேசி மூலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிற்றைக் கட்டி இறக்கி அந்த மயிலே உயிருடன் மீட்டுள்ளனர். அதன்பின் கால்நடை மருத்துவரை அழைத்து மயிலுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் வனத்துறையிடம் ஒப்படைக்கபட்ட மயிலானது வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.