Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மக்களுக்கு குட் நியூஸ்… அமலுக்கு வந்த மாற்றங்கள்… வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்சில் நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் நேற்று அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகளின் படி மதுபான விடுதிகள், உணவகங்கள் ஆகிய கட்டிடங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளே அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த கட்டிடங்களில் கையளிக்க வேண்டும். மேலும் இனி 100% வாடிக்கையாளர்களுக்கு கட்டிடங்களில் உள்ள மாடிகளிலும், வெளியிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 6 பேர் மட்டுமே ஒரு மேசையை சுற்றி அமர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமல்லாத பல நாடுகளை சேர்ந்த மக்களும் சர்வதேச பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அவர்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே நாட்டுக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக டிராபிக் லைட் சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இரவு 9 மணி வரை அமலில் இருந்த ஊரடங்கு நேற்று முதல் 11 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பிரெஞ்சு சுகாதார பாஸ்போர்ட் கட்டாயம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே 5000 பேர் வரை மட்டுமே பங்கேற்கும் படி நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை மக்களின் பயன்பாட்டிற்காக சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த மக்கள் எண்ணிக்கையுடன் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு சுகாதார பாஸ்போர்ட் கட்டாயம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாத்தலங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், கடைகள் ஆகியவற்றில் முன்பு அனுமதிக்கப்பட்டதை விட தற்போது அதிக மக்கள் அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பாதி அளவுக்கு மக்கள் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிச் சடங்குகளில் 75 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் சில விஷயங்களில் எந்தவித மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. பொது இடங்களில் சுகாதார விதிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே 10 பேருக்கு மேல் கூட அனுமதி வழங்கப்படுகிறது.

அதே சமயம் அனைத்து கட்டிடங்களிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி நடப்பவர்களிடமிருந்து 135 யூரோக்கள் அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு தளர்வுகளில் இரவு விடுதிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |