சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய 3 பேரை கைது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது உப்பனாறு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாராயம் காய்ச்சிய 3 பேரை மடக்கி பிடித்துள்ளனர்.
அதன்பின் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் கொள்ளுதீவு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன், வெற்றி செல்வன் மற்றும் பன்னீர்செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 200 லிட்டர் சாராயம் மற்றும் 250 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.