Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த காவல் அதிகாரி…. திடீரென நடந்த சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

காவல் அதிகாரி மீது லாரி மோதிய விபத்தில் டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டத்திலுள்ள நாகூர் காவல் நிலையத்தில் செல்வகுமார் என்பவர் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் கங்களாஞ்சேரி நாகூர் சாலையில் உள்ள சோதனை சாவடி பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் தனது பணியினை முடித்துவிட்டு காக்காகோட்டூர் அருகில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது வளப்பாற்றுபாலம் எதிரில்  பேரளத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிள் லாரியின் அடியில் சிக்கி செல்வகுமார் தூக்கி எறியப்பட்டு படுகாயத்துடன் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வகுமாருக்கு சிகிச்சை அளித்து திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து நன்னிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |