ஜெர்மன் அரசு கொரோனா தொற்றால் கடுமையாக பாதிப்படைந்த நிறுவனங்களுக்கு செப்டம்பர் மாதம் கடைசி வரை நிதியுதவி அளிக்க முடிவெடுத்துள்ளது.
ஜெர்மனியில் கொரோனாவால், தங்கள் வருமானம் பாதிக்கப்பட்டதாக நிரூபிக்கும் நிறுவனங்களுக்கு அரசின் பொருளாதார உதவிகள் வழங்கப்படும். இத்திட்டமானது இம்மாத இறுதியில் முடிவடைவதாக இருந்தது. தற்போது இத்திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் பாதிப்படைந்த நிறுவனங்கள், இதன் மூலம் மீண்டு வருவதற்கான வாய்ப்பு என்று அரசு கூறியுள்ளது. இந்நிலையில் பொருளாதார அமைச்சர் Peter Altmaier இத்திட்டத்தினால் பொருளாதார நெருக்கடிக்குள்ளான நிறுவனங்கள் விரைவில் மீள முடியும் என்று கூறியுள்ளார்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் அமைச்சரவை, ஊழியர்களுக்கு கொரோனாவால் உண்டான பிரச்சனையை தீர்ப்பதற்கு செப்டம்பர் மாதம் கடைசி வரை குறுகிய கால பணி ஊதியம் அளிக்கும் திட்டத்தை நீடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.