ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தை கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார் .
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தை கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.