ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரை நைஜீரியா சிறுவர்கள் தத்ரூபமாக ரீமேக் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
All we have to say to @IkoroduB is, "Super ra thambi, super ra"!#JagameThandhiram@dhanushkraja @karthiksubbaraj @Music_Santhosh @MrJamesCosmo @C_I_N_E_M_A_A @AishwaryaLeksh4 @KalaiActor pic.twitter.com/wGuoKGWXft
— Netflix India (@NetflixIndia) June 7, 2021
வருகிற ஜூன் 18-ஆம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நைஜீரியா சிறுவர்கள் தத்ரூபமாக ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரை ரீமேக் செய்துள்ளனர். அந்த வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.