Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜூன்-15-ல் அதிமுக சட்டமன்ற குழு உறுப்பினர்கள் கூட்டம் – அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டடார்.

இந்நிலையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 15 அன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கூட்டத்தின்போது தொண்டர்கள், நிர்வாகிகள் தலைமைக் கழகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |