நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தடுப்பூசி போடுவதற்கு முன்பாக கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.
இந்நிலையில் இது குறித்து டுவிட் செய்த ராகுல் காந்தி, இணையதளம் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்பது போதாது என்றும், தடுப்பூசி மையத்திற்கு வருபவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இணைய வசதி இல்லாதவர்களுக்கு வாழும் உரிமை உண்டு என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.