நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்படுகின்றன. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போதே ஒரு சில உயிர் இழந்து விடுகின்றனர். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து ராஜேஷின் மனைவி தனது கணவரின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்று பணத்தை எடுத்துள்ளார். அப்போது கணக்கிலிருந்து ரூபாய் 42,000 திருடு போயிருப்பது தெரிய வந்தது. உடனே அவர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர் பணத்தை திருடியது தெரிய வந்துள்ளது. பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.