பிரான்சில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை காவல்துறையினர் விசாரித்தபோது அதில், ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் பொதுவெளிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது, அல்லது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் Orly என்ற நகரத்தில் உள்ள rue Jean-Prouvé சாலையில் சில பேர் முகக்கவசம் இல்லாமல் வந்துள்ளனர்.
அந்த இடத்தில் அதிக மக்கள் இருந்துள்ளனர். எனவே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வருவதை, அறிந்த சில பேர் உடனடியாக தப்பி சென்றுவிட்டனர். எனினும் மீதமிருந்தவர்களை காவல்துறையினர் பிடித்துவிட்டனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதாவது, Smith & Wesson நிறுவனத்தின் கலிபர் வகையான, அத்துப்பாக்கியில் ஆறு குண்டுகள் இருந்துள்ளது. மேலும் அது புதிதாக தயாரிக்கப்பட்டது.
எனவே சந்தேகத்தின் அடிப்படையில் 31 வயது நபரை கைது செய்துள்ளனர். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.