விருதுநகர் மாவட்டம் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சேத்தூரை அடுத்துள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கனிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 7 மாதங்கள் முன்பு மாலதி(21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது மாலதி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தினமும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மாலதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சேத்தூர் புறநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.