Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சில தளர்வுகள்….. ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு?…. புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில், ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க முதல்வர் ஸ்டாலினிற்கு உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். கொரோனா குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நேர கட்டுப்பாட்டுடன் டோக்கன் முறையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க உள்ளதாகவும், பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறப்படுகிறது. புதிய தளர்வுகள் என்னென்ன என்பது குறித்து முதல்வர் நாளை அறிவிக்க உள்ளார்.

Categories

Tech |