இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது .
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ,2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 2-ம் தேதி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டிராவில் முடிந்தது. இந்நிலையில் எட்ஜ்பாஸ்டனில் இன்று 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது .
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்,கைல் ஜேமிசன், சான்ட்னெர் உட்பட 6 பேர் பங்கேற்கவில்லை. இந்த டெஸ்ட் போட்டியில் டிரென்ட் போல்ட் , மிட்செல் ஹென்ரி, பட்டேல், மற்றும் பிளண்டெல்ஆகியோர் இடம் பிடித்துள்ளன.
Playing XI:
இங்கிலாந்து அணி :
ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (கேப்டன் ), ஒல்லி போப், டான் லாரன்ஸ், ஜேம்ஸ் பிரேசி, மார்க் வுட், ஒல்லி ஸ்டோன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
நியூசிலாந்து அணி :
வில் யங், டேவன் கான்வே, டாம் லாதம் (கேப்டன்) , ராஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், டாம் பிளண்டெல், டேரில் மிட்செல், நீல் வாக்னர், மாட் ஹென்ரி, அஜாஸ் பட்டேல், டிரென்ட் போல்ட்.