Categories
உலக செய்திகள்

எப்படி நடந்துச்சுனே தெரியல..! நோயாளிகளுக்கு நேர்ந்த விபரீதம்… பிரபல நாட்டில் சோகம்..!!

ரஷ்யாவில் பிரபல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 நோயாளிகள் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர்.

ரஷ்யாவின் ரியாசான் நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து மளமளவென பற்றி எரிந்த அந்த தீயால் மருத்துவமனையில் உள்ளவர்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் விரைவாக வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் நான்கு திசையிலும் தீ வேகமாக எரிந்ததால் பலரும் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியாமல் அந்தத் தீயில் சிக்கி தவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அணைத்துள்ளனர். ஆனால் இந்த விபத்தில் 3 நோயாளிகள் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர்.

மேலும் 8 நோயாளிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |