Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த கடைகளுக்கு அனுமதி இல்லை… சோதனை செய்த தாசில்தார்… 7 கடைகளுக்கு அபராதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி திறந்த கடைகள் உட்பட சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காய்கறி, பலசரக்கு கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அங்காடி மற்றும் பேன்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தாசில்தார் அந்த உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்துள்ளார். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத 5க்கும் மேற்பட்ட உணவகங்கள், மளிகை கடைகளுக்கும் 8,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

Categories

Tech |