தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மே மாதம் முதல் செப்டம்பர் வரை காலாவதியாகும் உரிமங்கள் டிசம்பர் 2021 வரை நீட்டிக்கபடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு துறை, தொழிலாளர் துறை சார்பில் வழங்கப்பட்ட வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்ட பூர்வமான உரிமங்களும் டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்படுகிறது.