Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட…. தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழக அரசிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசு நடத்திய ஆய்வில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதுடன், தற்போது மாணவர் சேர்க்கை நடத்தி வருவது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் தொடர்பான விபரங்களை சேகரித்து அனுப்ப அதிகாரிகளுக்கு தொடக்கப்பள்ளி இயக்குனர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டு வந்தால், சார்ந்த வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரே பொறுப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |