Categories
உலக செய்திகள்

பால்கனியில் “தலை கீழாக யோகா” செய்த மாணவி… 80 அடி கீழே விழுந்த சோகம்..!!

மெக்ஸிகனை சேர்ந்த  கல்லூரி மாணவி பால் கனியில் யோகா செய்யும் போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். 

மெக்ஸிகன் கல்லூரியில் பயின்று வரும் மாணவி அலெக்ஸா டெர்ரஷாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றின் 6- வது மாடியில் வசித்து வருகிறார். தினமும்   தனது வீட்டின் பால்கனியில் இருந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வருவார். அதன்படி தன்னுடைய பால்கனியின்  வெளிப்புற கம்பியில் தலைகீழாக நின்றபடி யோகா பயிற்சி செய்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி  சுமார் 80 அடி கீழே சென்று தரையில் விழுந்தார்.

Image result for Alexa Terrazas, a student at the Mexican College, slipped from the 6th floor of an apartment.

இதையடுத்து  உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு 11 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கீழே விழுவதற்கு முன் அலெக்ஸா தலைகீழாக யோகா செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி அனைவராலும் பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |