Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான  பைனாப்பிள் கேசரி செய்து பாருங்க !!!

பைனாப்பிள் கேசரி

தேவையான  பொருட்கள் :

அன்னாசிப் பழம் – 1 கப்

ரவை – 1 கப்

சர்க்கரை  – 2 கப்

நெய்  – 1/4  கப்

அன்னாசி எசன்ஸ் –  2 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு  – 10

ஃபுட் கலர் (மஞ்சள்)  – 1/4  டீஸ்பூன்

எண்ணெய்  – 1 தேவையான அளவு

அன்னாசி க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் அன்னாசிப்பழத்துடன்   சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும் . ஒரு  கடாயில்  நெய் சேர்த்து ரவையை   வறுத்தெடுக்க வேண்டும் .  பின்னர் ஒரு கடாயில் நெய் மற்றும்  எண்ணெயை காய வைத்து முந்திரிப்பருப்பைப் போட்டு  3 கப் தண்ணீர் , மஞ்சள் கலர் சேர்த்து கொள்ள வேண்டும்.  தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையை கொட்டி கிளறி , ரவை வெந்ததும்  அன்னாசி, சர்க்கரை கலவையையும்  கொட்டி கிளற வேண்டும் .பின்  எசன்ஸ் சேர்த்து பரிமாறினால் சுவையான  பைனாப்பிள் கேசரி தயார் !!!

Categories

Tech |