பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை ஜெயிலில் அடைத்தனர்.
மயிலாடுதுறையில் அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாதுரை என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் மீது 2010- 2018 ஆம் ஆண்டு வரை அந்தப் பள்ளியில் படித்த மாணவி பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தற்போது கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவி பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனால் துணிச்சலோடு காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து 5-ம் தேதி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் 2008, 2016 ஆம் ஆண்டுகளுக்கு முன் பயின்ற 2 மாணவிகளும் அண்ணாதுரை மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் மூன்று நாட்களுக்கு பிறகு அண்ணாதுரையை நீதிபதி ரிசானாபர்வீன் வீட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.