அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள புளோரன்ஸ் நகரில் வசிக்கும் 35 வயது நபர் ஸ்டூவர்ட் ஓவன்ஸ். இவர் கடந்த 2016 ஆம் வருடத்தில் அக்டோபர் மாதம் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியை, இழுத்து சென்று தவறாக நடந்துள்ளார்.
அதன்பின் 2021 வருடத்தின் தொடக்கத்தில் 14 வயதுடைய ஒரு சிறுமியை அழைத்து, மது கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக அந்த பெண்ணை தனியாக அழைத்து சீரழித்துள்ளார். இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு, காவல்துறையினர் இவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.