தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் தேர்வில் பெரும்பாலானோரின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதன்காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் மறு தேர்வுக்கான தேதிகள் கொண்ட கால அட்டவணை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 21ம் தேதி தொடங்கி நடைபெறும் அரியர் தேர்வுகள் ஜூலை 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.