தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான கோவில்களின் பட்டியலை தயாரித்து கோயில் நிலங்களை ஆக்கிரமித்து அவர்களிடமிருந்து மீட்க வேண்டும். மேலும் கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து வாடகை வசூலிக்க வேண்டும். கோவில் சிலைகள், நகைகள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடவேண்டும். மத்திய சிலைகள் பாதுகாப்பு பிரிவை அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்நிலையில் பழமையான, பராமரிப்பற்ற கோயில்களை பாதுகாக்கும் நடைமுறைகள் அடங்கிய கையேட்டை 12 மாதங்களில் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவை தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வரவேற்றுள்ளார். மேலும் அர்ச்சகர்களுக்கும், கோயில் ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற தீர்ப்பை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.