அமெரிக்க ஜனாதிபதி தன்னுடைய அதிகாரபூர்வ பயணத்தை தொடங்கியதோடு மட்டுமல்லாமல் ரஷ்ய நாட்டிற்கும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் 8 நாட்கள் ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தன்னுடைய அதிகாரப்பூர்வ பயணத்தின் விளைவாக அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் கடந்த புதன்கிழமை இங்கிலாந்து வந்து சேர்ந்தார். இதனையடுத்து ஜூன் 11 மற்றும் 13ஆம் தேதி Cornwall லில் நடக்கும் ஜி-7 உறுப்பு நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி விண்ட்சர் கோட்டையிலிருக்கும் இங்கிலாந்து மகாராணியை சந்திக்க முடிவு செய்துள்ளார். இந்த பயணத்தின் இறுதியில் ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதியான புடினை சந்திப்பதற்கு திட்டம் போட்டுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜி-7 மாநாடு நடைபெறும் இடமான cornwall லிற்கு புறப்படுவதற்கு முன்பாக இங்கிலாந்திலிருக்கும் suffolk லுள்ள RAF mildenhall என்னும் விமானப்படை தளத்தில் வைத்து அமெரிக்க படை வீரர்கள் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருடனும் உரையாற்றியுள்ளார். அப்போது ரஷ்யா தீங்கு விளைவிக்கும் செயல்களை செய்தால், அமெரிக்க அரசு அதற்கான உகந்த பதிலடியை கொடுக்கும் என்று பகிரங்கமாக ஜனாதிபதியான ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.